வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:03 IST)

இது தான் "தலைவர் 168" கெட்டப்பா? இணையத்தை ஆர்ப்பரிக்கும் ரஜினியின் நியூ லுக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ள நிலையில், அடுத்ததாக அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ’தலைவர் 168’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில்  குஷ்பு, மீனா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது "தலைவர் 168" படத்தின் புதிய லுக் என்று கூறி ரஜினியின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதில் கிராமத்து லுக்கில் கெத்தாக ரஜினி தோற்றமளித்துள்ளார்.