ஜூலை 13 தமிழ் படம் 2 ரிலீஸ்: இயக்குனர் சூசகம்!
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழ் படம் 2 உருவாகி வரும் நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜூலை 13 ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே, படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்ககும் நிலையில், படம் ஜுலை 13 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படலாம் என தெரிகிறது.
எனவே, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.