செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 24 ஜூன் 2018 (18:11 IST)

அவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0

தமிழ் படம் 2.0 படத்தின் அறிமுக பாடல் தொடர்பான புது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தமிழ் படம் 2.0. இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரே அதிரவைத்தது. அதைத்தொடர்ந்து அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த முறை படங்களையும் கடந்து அரசியல், உலக தலைவர்கள் என பல்வேறு பிரிவுகளில் கேலி செய்துள்ளனர். இந்நிலையில் இன்று படத்தின் அறிமுக பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் அறிமுக பாடல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது டிக் டிக் டிக் படத்தை கேலி செய்யும் விதத்தில் உள்ளது.
 
அவுட் ஆப் தி வேர்ல்ட் அகில உலக சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் ஹைலைட்.