வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (19:11 IST)

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் சுசீந்தரன் புதிய முகங்களை வைத்து இயக்கும் ’ஏஞ்சலினா’ படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


 
சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, ஜீவா போன்ற பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். அவர் 2013-ஆம் ஆண்டு புது முகங்களை வைத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் நல்ல வசூலையும், பாராட்டுகளையும் அவருக்கு வாங்கி தந்தது. 
 
இதனால் தற்போது அவர் புது முகங்களை வைத்து ’ஏஞ்சலினா’என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், 
 
”எனது அடுத்த திரைபடமான ‘ஏஞ்சலினா’ இன்று அதிகாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிஷியன்ஸ், நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என் பதிவிட்டுள்ளார்.