ஏஞ்சலினா ஜோலியா இது?? வைரலாகும் கொடூர புகைப்படம்!!

Last Updated: சனி, 2 டிசம்பர் 2017 (12:32 IST)
ஈராக்கை சேர்ந்த பெண் ஒருவர் ஏஞ்சலினா ஜோலியாக மாற ஆசைப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பார்ப்பதற்கே மிகவும் கொடூரமாக உள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் வசித்து வருகிறார் சஹர் தாபர், நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகை. ஏஞ்சலினா போல காட்சி அளிப்பதற்காக இவர் செய்யும் மேக்கப்கள் மிகவும் பிரபலம்.


ஒரு கட்டத்தில், ஏஞ்சலினா போலவே இருப்பதற்காக முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார். இதற்காக மொத்தமாக 50 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அவரை போல உடலையும் டயட் இருந்து குறைத்துள்ளார்.
50 பிளாஸ்டிக் சர்ஜரிகள் காரணமாக அவரது முகம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. ஹாலிவுட் பட பேய் போல்யுள்ளார். வெறும் 19 வயதே ஆனா இந்த பெண் தற்போது 40 வயது தாண்டிய பெண் போல் காட்சி அளிக்கிறார்.


இவரது புகைப்படங்கள் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்கவிருப்பது மேலும் அதிர்ச்சியை தருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :