திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 31 ஜூலை 2021 (16:58 IST)

சூப்பர்ஸ்டார் பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்....இணையதளத்தில் வைரல்

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சர்காரு வாரு பாட்டா  என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார்.

இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று சர்காரு வாரு பாட்டா படக்குழுவினர் நேற்று முன் தினம்  ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது.

அதில்,வரும் ஜுலை 31 ஆம் தேதி சர்காரு வாரு பாட்டா படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்தது. அதன்படி தற்போது மகேஷ் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் சர்க்காரு வாரு பாட்ட என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் சிவப்பு நிறக் கிளாஸிக் காரில் அவர் வெளியே எட்டிப் பார்ப்பது போல் மாஸாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் மகேஷ்பாவுவின் இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.