1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (17:09 IST)

நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பிரியங்கா

இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் பிரியங்கா.





விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா. படங்களிலும் பாடியுள்ள பிரியங்காவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  எல்லாப் பாடகர்களுக்குமே இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். பிரியங்காவுக்கும் இருந்த அந்தக் கனவு, சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.