1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:09 IST)

நடிகர் சங்கத்திடம் பேசுகிறேன் ; எனக்கெதிராக பேசினால்? - ஸ்ரீரெட்டி எச்சரிக்கை

தனக்கு எதிராகவும், பெண்களுக்கு அவதூறாகவும் பேசினால் அவர்களின் மேல் சட்டம் பாயும் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.  அதோடு, இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில், அவரது முகநூலில் “நடிகர் சங்கத்திடம் பேச இருக்கிறேன். இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசரிடம் பேசியுள்ளேன். திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேச இருக்கிறேன். 

 
பத்திரிக்கையாளர் சந்திப்பில் எனக்கோ அல்லது பெண்களின் பிரச்சனைகளுக்கு எதிராக பேசினால், சட்டம் 294 மற்றும் 509 படி பெண்களின் மீதான வன்முறை மற்றும் ஈவ் டீசிங் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பாயும். எனவே, தேவையில்லாமல் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.