உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள் - ஸ்ரீரெட்டி ஆவேசம்
நான் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் திரை பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
ஆனால், அவரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் “தற்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. நான் கூறும் குற்றச்சாட்டை மறுக்கும் நபர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறீர்களா? நான் தயாராக இருக்கிறேன். அப்படி செய்தால் நான் கூறுவதும், அவர்கள் கூறுவதும் உண்மைதான என தெரிந்து விடும் அல்லவா. இதற்கு அவர்கள் தயாரா?” என அவர் கேள்வி எழுப்பினார்.