வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (14:55 IST)

ஒன் பை ஒன்... அப்டேட்டை அள்ளி வீசிய சூரரை போற்று டீம் - நடுவானில் முதல் சிங்கிள்..!

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.
 
நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த இப்படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று அப்டேட்டுகளை படக்குழு அளித்து வருகிறது. அந்தவகையில் சற்றுமுன் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் ‘வெய்யோன் சில்லி’ என்ற முதல் ரொமான்டிக் சிங்கிள் டிராக் வருகிற பிப்ரவரி 13ம் தேதி spicejet boeing 737 ரக விமானத்தின் மூலம் நடுவானில் வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இப்படி நடந்ததில்லை என்பது குறிப்பதக்கது.