1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (07:45 IST)

சென்னை விமான நிலையத்தில் சூர்யா நடத்தும் விழா: சிறப்பு அனுமதி

சென்னை விமான நிலையத்தில் சூர்யா நடத்தும் விழா
சென்னை விமான நிலையத்தில் சூர்யா நடத்த இருக்கும் விழா ஒன்று குறித்து தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாக் ஆக உள்ளது 
 
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விடும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் பணிகளை செய்துவரும் படக்குழுவினர் சமீபத்தில் இந்த படத்தின் டீஸரை வெளியிட்டனர் என்பது தெரிந்ததே. இந்த டீசருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் வரும் 13ம்தேதி சூரரைப்போற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. பிரபல விமான நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் இது என்பதால் விமானத்தை சேர்ந்த ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என சூர்யா திட்டமிட்டார் 
 
இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இந்த படத்தின் ஆடியோ விழாவை நடத்த படக்குழுவினர் முடிவு செய்தனர். இதற்காக விமான நிலைய அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதியை பெற்றுள்ளதாகவும் வரும் 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் சூரரைப்போற்று படத்தின் ஆடியோ விழா நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது
 
சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்பு மட்டுமே நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல்முதலாக ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது