செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (17:25 IST)

சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பை நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ’அமரன்’ என்ற படத்தில் நடத்தி முடித்த நிலையில் அவர் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் ’குரங்கு பெடல்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்பவர் இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தில் சுமி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் சிவானந்தேஸ்வரன் இந்த படத்திற்கு படத்தொகுப்பு பணியை செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran