விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் - அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட விவசாயிகளை மிரட்டிய வனத்துறை! .
கோவை பேரூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளான தீத்திபாளையம் கரடிமடை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் சில நாள் போராட்டத்திற்கு பிறகு வனப் பகுதியில் விரட்டினர்.
இந்நிலையில் வனப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் கடும் பறச்சி நிலவி வருகிறது.
இதனால் தண்ணீர் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கம்பு, சோளம், தர்பூசணி போன்ற காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
விளை நிலங்களில் புகுந்த யானைகளை டிராக்டர் உதவி கொண்டு அப்பகுதி விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், வனத்துறையினருக்கு போதுமான ஜீப் உள்ளிட்ட வாகன வசதி இல்லாததாலும் யானைகளை வனத்திற்குள் விரட்டுவதில் சிக்கல் நீடிப்பதாகவும், மேலும் யானைகளை விவசாயிகள் விரட்டிய வீடியோவை பதிவு செய்த செந்தில் குமார் என்ற விவசாயி கைது செய்வேன் என வனத்துறை ஊழியர்கள் மிரட்டுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றசாட்டி வருவதாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.