என்ன எதிர்க்க தகுதிய வளத்துக்கோ... சிவா vs நயன்: Mr.லோக்கல் டிரெய்லர்
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள Mr.லோக்கல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் ராஜேஷ் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கும் சூழலில் இன்று வெளியாகியிருக்கிறது மிஸ்டர் லோகல் டிரெய்லர். ஏற்கனவே இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
சிவகார்த்திக்கேயனுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான மோதல் அப்புறம் காதல் என படம் உருவாகியுள்ளது போல, அதோடு சில டிச்விஸ்டும் இருக்கும் என தெரிகிறது. ராஜேஷ் தனது வழக்கமான டெம்ப்ளேட்டை பயன்படுத்தியே படத்தை எடுத்திருக்கிரார் என டிரெய்லரை பார்த்ததும் தெரிகிறது. இந்த முறை இது வொர்க் அவுட் ஆகுமா என பார்ப்போம்.