புதிய படத்தில் டானாக மாறி மிரட்டும் ராதிகா சரத்குமார்

Last Updated: புதன், 1 மே 2019 (13:27 IST)
சரண் இயக்கத்தில் நடிகை ராதிகா மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஆரவ், காவ்யா தாபர் ஆகியோர் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்கள். முற்றிலும் மாறுபட்ட டான் கதையில், ஆரவுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்தில் பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார் ராதிகா. மேலும் தனது அப்பா எம்.ஆர். ராதா போன்று பேசி நடிக்கிறாராம். இதனால் இந்த படத்தை பார்க்கும் ஆவல் மேலும் கூடியுள்ளது என்றே கூறலாம்.
 
ராங்கிகதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னால் ராதிகா அசத்திவிடுவார். டானாக நடிக்க சொல்லவாவேணும். படத்தின் போஸ்டரில் ராதிகா கெத்தாக நாற்காலியில் அமர்ந்து சுருட்டு பிடிப்பது போலவும், பக்கத்தில் ஆரவ் நின்றுகொண்டிருப்பது போலவும் போஸ்டர் வெளியாகியுள்ளது
படத்தில் ஆரவ் ரயில்வே கான்டிராக்டராகவும் நடிக்கிறாராம். இந்த படத்தில் புது ஆரவை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிறார் இயக்குநர் சரண். அமர்க்களம், அட்டகாசம், ஜெமினி மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகிய என் படங்களில் கேங்ஸ்டர் கதையை கையாண்டுள்ளேன். அது  போலவே இதுவும் சுவாரஸ்யமாகவும், வித்தியாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் இயக்குநர் சரண்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் துவங்குகிறது. படத்திற்கு இசை சைமன் கே கிங், சரணின் சகோதரர் கே.வி. குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :