திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (12:23 IST)

சிவகார்த்திகேயன் எடுத்துள்ள முக்கிய முடிவு

உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக, விஜய்க்குப் பிறகு  சிவகார்த்திகேயனுக்குத்தான் அதிகமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர்.
 
இந்நிலையில், தன்னுடைய முக்கிய முடிவு பற்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய மகள் ஆராதனாவுக்கு நான்கரை வயதாகிறது. ஆனால், இதுவரை பீட்ஸா, பர்கர் போன்ற ஜங்புட் உணவுகளை இதுவரை கொடுக்காமலேயே வளர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
 
அத்துடன், உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், அதன்படி நடந்தும்  வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான வேலைக்காரன்’ படமும் இதைப்பற்றியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.