புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 டிசம்பர் 2022 (14:32 IST)

முத்தம் கொடுத்த சிவாஜி… வாலி அடித்த கமெண்ட்டால் சோகமான இளையராஜா

சமீபத்தில் நடந்த சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இசைஞானி இளையராஜா பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு பற்றி மருதுமோகன் என்பவர் எழுதிய சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். இந்த நூலில் சிவாஜி கணேசன் செய்த பல கொடைகள் மற்றும் அவரை பற்றி தெரியாத பல விசயங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் முத்துமோகன் கூறியுள்ளார். இந்த நூலை வெளியிட்டு பேசினால் இசைஞானி இளையராஜா.

அப்போது தனக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையிலான நட்புப் பற்றி பேசினார். அதில் ஒருமுறை சிவாஜி தன்னைப் பாராட்டி ஒரு முத்தம் கொடுத்ததாகவும், அதற்கு பாடல் ஆசிரியர் வாலி “பத்மினிக்கு கூட இப்படி ஒரு முத்தம் கொடுத்திருக்க மாட்டாரு” எனக் கமெண்ட் அடிக்க அதற்கு இளையராஜா கோவித்துக் கொண்டாராம். மேலும் வாலியிடம் “என்ன அண்ணன் நீங்க இப்படி சொல்லிட்டீங்க. அவங்களுக்கு கொடுக்குறதும் எனக்குக் கொடுக்குறதும் ஒன்னா என்ன?” எனக் கேட்டதாகவும் பகிர்ந்துகொண்டுள்ளார்.