உள்ள வரலாமா எனக் கேட்ட சிவாஜி… இளையராஜா சொன்ன பதில் – அவரே பகிர்ந்த சீக்ரெட்!
சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு பற்றி மருதுமோகன் என்பவர் எழுதிய சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். இந்த நூலில் சிவாஜி கணேசன் செய்த பல கொடைகள் மற்றும் அவரை பற்றி தெரியாத பல விசயங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் முத்துமோகன் கூறியுள்ளார். இந்த நூலை வெளியிட்டு பேசினால் இசைஞானி இளையராஜா.
அப்போது அவர் “என்னை சிவாஜி அண்ணன், ராஜா என்று அழைக்கமாட்டார். ராசா என்றுதான் அழைப்பார். என் ஸ்டுடியோவுக்கு வரும் போது “உள்ளே வரலாமா” எனக் கேட்டார். நீங்கள் வருவீர்கள் என்றுதான் தவம் கிடக்கிறோம் எனக் கூறினேன்” எனப் பேசி நெகிழ்ந்துள்ளார்.