திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (19:00 IST)

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

'தளபதி 63' படத்தில் விஜய்யுடன் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

 
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்தில்  பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள  தகவல் என்னவென்றால்,  விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் பாலிவுட்டின் கிங் காங் என்றழைக்கப்படும் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது.   இது குறித்து 'தளபதி 63' படக்குழுவினரிடம் விசாரித்த போது, "இதில் உண்மையில்லை. அப்படியொரு எண்ணமில்லை" என்று தெரிவித்தார்கள்.