திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (19:21 IST)

சர்வர் சுந்தரம் ரிலீஸ் எப்போது? முக்கிய அறிவிப்பு வெளியானது

சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனந்த் பால்கி இயக்கத்தில், சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’. ஹீரோயினாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்து, பின்னர் படத்தின்  ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும், ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இதற்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வாங்கியிருக்கும் கடன் தான் காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்நிலையில், சர்வர் சுந்தரம் படம் வரும் ஜுலை 6ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திற்கு பிறகு ரிலீஸாகும் படம் இதுவாகும்.