சர்வர் சுந்தரம்… மீண்டும் தொடங்கிய ஓடிடி பேச்சுவார்த்தை!
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படம் ஓடிடியில் ரிலிஸாவதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படம் 2017 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் இன்னமும் ரிலீஸாகாமல் உள்ளது. இதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற முடிவில் உள்ள தயாரிப்பாளர் பிப்ரவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது ஒரு வழியாக ரிலிஸானால் போதுமென்ற முடிவில் ஓடிடி ரிலிஸூக்கு தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறதாம்.