படப்பிடிப்பின் போது தலையில் காயமடைந்த இயக்குனர் சேரன்!
இயக்குனர் சேரன் இப்போது ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கோடு நடத்தி வருகிறார்.
இயக்குனர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சேரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க குடும்பத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வரும் இந்த படத்தின் தற்போது நடந்து வருகிறது.
இந்த படத்தில் இயக்குனர் சேரன் கௌதம் கார்த்திக்கோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பின் போது தவறுதலாக விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து தலையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.