புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 டிசம்பர் 2018 (13:43 IST)

"அரசாங்கத்திற்காக நாம் இல்லை" வைரலாகும் "சீதக்காதி" வீடியோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படம்  ‘சீதகாதி’, இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். 


 
இப்படத்தில் அர்ச்சனா, பகவதி பெருமாள், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற நட்சத்திரங்களும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா மேனன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
 
சமீபத்தில் இந்த படத்தின் புரோமோஷனுக்காக சீதக்காதி அய்யாவின் முழு உருவ மெழுகுச்சிலை 4 மாவட்டத்திற்காக உருவாகியுள்ளது .
 
இந்நிலையில் மீண்டும் படத்தை புரோமோஷன் செய்யும் விதத்தில் " சீதக்காதி" படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.


 
இந்த வீடியோவில் " கோர்ட்டில் நின்று விஜய் சேதுபதி ஒரு தத்துவமான டயலாக்கை பேசுகிறார் அதாவது " எனக்காக.. உங்களுக்காக...நமக்காக தான் அரசாங்கமே ஒழிய அரசாங்கத்திற்காக நாம் இல்லை சரிதானா ?" என்று என்று பேசி முடிக்கும் போது கைதட்டலின் ஓசையால் அரங்கமே அதிருகிறது .
 
இதோ அந்த வீடியோ!