1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (21:17 IST)

'தல கூட நடி தல' அரங்கத்தை அதிரவைத்த விஜய் சேதுபதியின் மாஸ் பதில்

நடிகர் விஜய்சேதுபதி ஒரே டிராக்கில் பயணிக்காமல் பல்வேறு கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் மாதிரியே இவருக்கு எந்த கெட்டப் போட்டாலும் சூப்பரா செட்டாகும். குறிப்பாக ரவுடி மற்றும் டான் கெட்டப், நெகட்டிவ் ரோல் அஜித்துக்கு பின்னர் விஜய் சேதுபதிக்குத்தான் பக்காவாக இருக்கிறது . அஜித் மற்றும் விஜய் சேதுபதி சேர்த்து நடித்தால் அந்த படம் மாஸாக இருக்கும் என்பது உறுதி.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், தல கூட நடி தல என்று ரசிகர்கள் ஆரவாரக்குரலில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, சான்ஸ் கொடுத்தா சந்தோஷம் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிலுக்கு அரங்கம் அதிர்ந்தது.