புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (15:45 IST)

பிரபல தொலைக்காட்சியில் சதீஷின் நாய் சேகர்… வெளியான செம்ம அப்டேட்!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நாய் சேகர் படம் திரையரங்குகளில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸானது.

சதீஷ்  மற்றும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா ஆகியோர் நடித்த ‘நாய்சேகர்’ படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நாய் ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியான நாய் சேகர் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்கவில்லை. ஆனால் ஓடிடியில் வெளியான போது கவனத்தைப் பெற்றது.

இதையடுத்து தற்போது சன் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிரீமியர் ஆக உள்ளது.