திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (10:35 IST)

ரசிகர்களுக்கு செம்ம நியூஸ்....அஜித் பிறந்தநாளில் தொலைக்காட்சியில் வலிமை?

வலிமை திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதை உறுதிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

முன்னதாக வலிமை திரைப்படம் வெளியாகி 48 மணிநேரத்தில் சுமார் 200 மில்லியன் நிமிடங்கள் ஸ்ட்ரீம் ஆகி சாதனைப் படைத்துள்ளதாக ஜி 5 சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் 500 மில்லியன் நிமிடங்கள் தாண்டி ஸ்ட்ரீம் ஆகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஓடிடியில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வலிமை திரைப்படம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.