சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகி வருகிறது இந்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம். இப்போது அந்த நிறுவனம் ஐந்து படங்களை வரிசையாக தயாரிக்கிறது. சமீபத்தில் அவர்கள் தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.
இதையடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த ஒரு படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் டைட்டில் “டூரிஸ்ட் பேமிலி” என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.