வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (09:10 IST)

சசிகுமாரின் அடுத்த படத்தில் இணைந்த சிம்ரன்…!

கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து நம்பிக்கைக்குரிய தயாரிப்பு நிறுவனமாக உருவாகி வருகிறது இந்த படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம். இப்போது அந்த நிறுவனம் ஐந்து படங்களை வரிசையாக தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தில் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிலையில் விரைவி ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிவிப்பு அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.