ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (12:08 IST)

இசைக்கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பறையிசைக் கலைஞர்களோடு குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் அதன் பின்னர் பீட்சா, சூதுகவ்வும் என வெரைட்டியான ஆல்பங்களைக் கொடுத்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களினால் ஸ்டார் இசையமைப்பாளராக மாறினார். இப்போது தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் இசை மற்றும் தயாரிப்பில் உருவான எஞ்சாய் எஞ்சாமி பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இப்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பறையிசைக் கலைஞர்களோடு சேர்ந்து நடனமாடியுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு ‘கார்த்திக் சுப்பராஜ் படத்தின் உரையாடலுக்குப் பின் பிரியமான நாட்டுப்புறக் கலைஞர்களோடு ஜாலியான நேரம்’ எனக் கூறியுள்ளார்.