செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (23:42 IST)

பிரஷாந்த் படத்தில் இணைந்த முன்னணி நடிகை !

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவர் இடையில் பிஸினஸில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்கவந்துள்ளார்.

.இரண்டாவது மிகப்பெரிய கம்பேக்காக கருதப்படுவது இவர் தற்போது நடித்து வரும் அந்தாதூன் பட ரீமேக் .

இப்படத்தில் ஏற்கனவே நடிகை சிம்ரன் இணைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதில் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்துடன் இருப்பது  போன்ற புகைப்படம் உள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.