வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:31 IST)

சூர்யாவுக்கு டஃப் கொடுக்கும் விஷால்: சண்டகோழி 3 வெரி சூன்...

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டகோழி 2 படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
விஷால் நடிப்பில் வெளியான படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் ரிலீஸானது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டது.
 
இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் குறை வைக்கவில்லையாம். பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருப்பதால், இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. 
 
விஷால் தன் கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுப்பதற்குள், கதையை எழுதி முடித்துவிட திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. ஏற்கனவே, ஹரி - சூர்யா கூட்டணியில் சிங்கம் 3 வரை உருவாகியுள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு டஃப் கொடுக்கும் விதமாக சண்டக்கோழி 3 விரைவில் வெளியாக கூடும் போல...