வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:35 IST)

விமர்சித்தவர்களுக்கு சமந்தா கொடுத்த பதிலடி

அண்மையில் நடிகை சமந்தா அவரது கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்பட்ட கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனை பார்த்து ரசிகர்கள் பலர் சமந்தாவை விமர்சித்து கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு இப்படி கிளாமராக ஆடைகள் அணிந்து  புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியில்லை என பல ரசிகர்கள் சமந்தாவை திட்டி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் சில ரசிகர்கள் ஆதரவும்  தெரிவித்து லைக் செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் ரசிகர்களின் அர்ச்சனையால் கிளாமர் படங்களை வெளியிடுவதை சமந்தா நிறுத்திவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கணவர் நாகசைதன்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளார். நேற்று வெளியான புகைப்படத்துக்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக்  செய்துள்ளனர். பல ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அது மட்டுமல்லாமல் "திருமணத்துக்கு பிறகு நான் எப்படி வாழ வேண்டும் என்று சொல்பவர்களுக்கு" என பதவினை போட்டு, நடுவிலைக் காட்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு நன்றி என கூறியிருக்கிறார்.