ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (17:46 IST)

யு டர்ன் - கோடிகளில் வசூல்: சமந்தா ஹேப்பி

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார்.
 
இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள்  அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக சீமராஜா, யு டர்ன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
யு டர்ன் படத்தில் சமந்தாவுடன் நடிகர் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா உட்பட பலர் நடித்திருந்தனர். கன்னட ரீமேக் படமான யு டர்ன் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 23 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.