வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:22 IST)

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

shakundhalam
சமந்தா நடித்த சாகுந்தலம் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா தற்போது சாகுந்தலம், குஷி மற்றும் யசோதா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்
 
இந்த நிலையில் குஷி திரைப்படம் ஏற்கனவே டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்து இரண்டு சமந்தாவின் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
சமந்தா, மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் படமாக வெளியாகிறது என்றும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது