வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:59 IST)

சமந்தாவின் அடுத்த படத்தின் செம அப்டேட்: ரசிகர்கள் குஷி!

samantha
நடிகை சமந்தா நடித்து வரும் திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் 
 
நடிகை சமந்தா நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று சாகுந்தலம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
சமந்தா, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கி உள்ளார் என்பதும் மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதால் சமந்தா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.