சமூகவலைதளங்களில் கணவரின் குடும்பப் பெயரை மாற்றிய சமந்தா!
நடிகர் சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஆந்திராவிலேயே செட்டில் ஆனார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சக நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் அவர் ஆந்திராவில் செட்டில் ஆனாலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பின்னர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சேர்த்துகொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றினார்.
ஆனால் இப்போது அக்கினேனி என்பதை நீக்கிவிட்டு S என்ற எழுத்தை மட்டும் வைத்துள்ளார்.