வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:27 IST)

2 மாதத்தில் 1.6 லட்சம் லிட்டர் அதிகமான ஆவின் பால் விற்பனை!

தமிழக அரசு பொறுப்பேற்றதும் ஆவின் பால்களுக்கான விலையைக் குறைத்து உத்தரவிட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் மே 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள பதவியேற்று சட்டமன்ற அலுவலகம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய திட்டங்கள் பலவற்றிற்கு கையெழுத்திட்டுள்ளார். அதன்படி கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா ரூ.4000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் ஆவின் பால் விலையை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த விலைக்குறைப்புக்குப் பின்னர் ஆவின் விற்பனை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விலைக்குறைப்பு அறிவிப்புக்கு பின்னான இந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை உயர்ந்துள்ளது.