வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:05 IST)

சமந்தாவை வைத்து காசு பார்க்க ப்ளான் போடும் மாமனார்!!

நடிகை சமந்தாவை வைத்து படம் தயாரித்து தன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளராம் நாகர்ஜுனா.

 
சமீபத்தில் நகர்ஜூனா நடிப்பில் வெளியான படம் மன்மதுடு 2. இந்த படம் தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை நாகர்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரித்த நிலையில், கடும் நெருக்கடியை சந்தித்துள்ளாராம். 
 
எனவே, ராசியான தனது மருமகளை வைத்து படம் இயக்கி நஷ்டத்தை ஈடுகட்ட திட்டமிட்டுள்ளாராம். ஆம், சமந்தா டோலிவுட்டின் ராசியான நடிகை. சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களை அனைத்துமே ஹிட் அடிக்கிறது. 
பட தோல்வியில் தத்தளித்த தனது கணவருடன் மஜிலி படத்தில் நடித்து ஹிட் அடிக்க வைத்து கணவரின் மார்கெட்டை மீட்டுக்கொடுத்தார். அதேபோல இப்போது தனக்கு உதவுவார் என நாகர்ஜூனா யோசித்து உள்ளாராம். 
 
சமந்தா சமீப காலமாக பட தேர்வுகளை கவனமாக உள்ள நிலையில், மாமனாருக்காக ஒரு படத்தில் நடித்து கொடுப்பாரா அல்லது நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிப்பார என பொருத்திருந்து பார்போம்.