வெப் சீரிஸில் தீவிரவாதியாக சமந்தா
இந்திய அளவில் பெரிதும் பேசப்படும் வெப் சீரிஸ் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் சமந்தா தீவிரவாதி கதாப்பாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா தமிழ், தெலுங்கு திரைப்படத் துறையில் வெற்றி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். தற்போது 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமேசான் பிரைமின் ”தி ஃபேமிலி மேன்” என்ற வெப் சீரீஸின் இரண்டாம் பாகத்தில் தீவிரவாதி வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் கதாநாயகனாக நடித்துள்ள “தி ஃபேமிலி மேன்” வெப் சீரிஸின் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.