வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (17:25 IST)

பினராயி விஜயனாக மம்முட்டி..”ஒன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மம்முட்டி பினராயி விஜயனாக நடிக்கும் “ஒன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு மலையாளத்தில் ”ஒன்” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, பினராயி விஜயனின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

இந்நிலையில் “ஒன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பெருகி உள்ளது.

“ஒன்” திரைப்படத்தை சந்தோஷ் விஷ்வநாதன் என்பவர் இயக்குகிறார். ICHAIS தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 50 கோடி பட்ஜெட் என தெரியவருகிறது. வருகிற 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இத்திரைப்படத்தை வெளியிட திரைப்பட குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் அம்பேத்கர் கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக மம்முட்டி தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.