மாஸ்டர் படத்தின் டிரைலரே வராது… விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு!
மாஸ்டர் படத்தின் டிரைலர் ரிலிசாகாமலேயே படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை இன்னும் ரிலிஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.
ஆனால் அப்படி ஒரு டிரைலர் ரிலீஸாகமலேயே படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக 20 வினாடி, 30 வினாடி ப்ரோமோக்கள் எல்லாம் வரிசையாக அடுத்தடுத்து ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.