பாயும் புலியில் நடிக்கும் ஆர்கே
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் பாயும் புலி படத்தில் ஆர்கே அறுபது வயது முதியவராக நடிக்கிறார்.
என் வழி தனி வழி படத்தின் 25 நாளை ஷீல்டு தந்து கொண்டாடிய ஆர்கே, வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நீது சந்திராவுடன் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்த போதே, அவன் இவன் படத்தில் வில்லனாக நடித்தது போன்று, பாயும் புலி படத்திலும் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.