1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மே 2017 (11:55 IST)

நடிகையை நம்ப வைத்து ஏமாற்றிய ரியோ!!

பிரபல தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் சரவணன் மீனாட்சி என்ற டிவி சீரியல் மூலம் நடிகரானவர் ரியோராஜ்.


 
 
இந்நிலையில் ரியோ பலருக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த உண்மையான செய்தி என்னவெனில்...
 
ரியோ பெயரில் யாரோ சமூக வலைத்தளங்களில் போலியாக அக்கவுண்ட் தொடங்கி, பலரிடம் நடிக்க வாய்ப்பு தருவதாக சாட் செய்து ஏமாற்றியுள்ளார்.
 
இது கடைசியாக ரியோவிற்கு தெரியவர இதை கேட்டு  அதிர்ந்து போனராம். மேலும் அப்படி ஏமாந்தவர்களில் ஒரு நடிகையும் உள்ளாராம்.
 
எனக்கு ஒரு கால் செய்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காதே என அப்பாவியாக ரியோ அந்த நடிகையிடம் கேட்டுள்ளார்.