புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (16:30 IST)

பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்… முதல் முறையாக ஒரு நடிகை!

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேற்குலகில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பாலிவுட்டுக்கு பரவியதை அடுத்து இப்போது தென்னிந்தியாவில் நான்கு ஆண்டுகளை தொட்டுள்ளது. தமிழில் நான்கு ஆண்டுகளும் கமலே தொகுத்து வழங்க தெலுங்கில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரபலம் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பெண் பிரபலத்தை தொகுத்து வழங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது வேறு யாருமில்லை நம் ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் தானாம். இது சம்மந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது