தமிழுக்கு வரும் ராம்சரணின் ஹிட் படம்!
ராம்சரண் தேஜா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ரங்கஸ்தலம் திரைப்படம் தமிழில் அதே பெயரில் டப்பிங் ஆக உள்ளது.
ராம்சரண் தேஜா ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இதனால் தமிழில் நல்ல் மார்க்கெட் தனக்கு உருவாகும் என ராம்சரண் தேஜா நம்பி இருக்கிறார். அதனால் தனது பழைய ஹிட் படமான ரங்கஸ்தலம் படத்தை டப்பிங் செய்து அதே பெயரில் மே மாதம் ரிலிஸ் செய்ய உள்ளாராம். ஏற்கனவே இந்த படத்தை தமிழில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்ய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.