1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (13:05 IST)

லண்டனில் திருடுபோன பாஸ்போர்ட் - ஏர்போர்ட்டில் தத்தளித்த ரஜினி மருமகன்!

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் விசாகனுடன் லண்டன் நகரத்திற்கு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டனுக்கு செல்ல பிசினஸ் கிளாஸ் வகுப்பில் முன்பதிவு செய்துள்ளனர். 


 
பின்னர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற அவர்கள் , அங்குள்ள ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்தவுடன் எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் வைத்திருந்த பிரீப் கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அந்த பிரீப் கேஸில் பாஸ்போர்ட்டுடன்  பல லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பாஸ்போர்ட்டுடன்  சேர்ந்து பணமும் போனதால் இருவரும் விரக்தி அடைந்துவிட்டனர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் அவர்களை ஓய்வறையில் அமரவைத்து இந்திய தூதரகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ரஜினியின் மருமகன் என்பதால் உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட்டில் என்ட்ரி போட்டுவிட்டு வெளியே அனுப்பினர். 

தற்போது பை திருபோனது குறித்து சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆராய்ந்து லண்டன் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்