புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (12:36 IST)

ஷெரினை ஜெயிக்க வைக்க வனிதா போட்ட மாஸ்டர் பிளான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  இன்று வெளிவந்துள்ள முதல் இரண்டு ப்ரோமோக்களுமே நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.  


 
தோழிகளாக இருந்து வந்த ஷெரின் மற்றும் வனிதாவுக்கு இடையில் சண்டை ஆரம்பித்திருப்பது பல புதிய திருப்பங்ககளையும் ஏற்படுத்தியுள்ளது. ஷெரின் - தர்ஷனின் உறவை கொச்சைப்படுத்திய வனிதாவை மக்கள் பலரும் திட்டி வருகின்றனர். இதனால் ஷெரின் கதறி அழ சேரன் அவரை சமாதானம் செய்கிறார். 
 
ஆனால், இவர்களின் இந்த சண்டையும் திட்டமிட்ட சண்டை தான் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர். வனிதா இவ்வாறு செய்ததால் ஷெரினுக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடைத்து நிறைய  ஓட்டுக்களை பெறுவார். எனவே தான் இந்த நாடகம் தற்போது அரங்கேறியுள்ளதாவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.