வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (17:22 IST)

ரஜினியின் ஜெயிலர் முதல்நாளில் ரூ.100 கோடி வரை வசூல்? வெளியாகும் தகவல்

jailer
ரஜினியின் ஜெயிலர் படம்  உலகம் முழுவதும்   முதல் நாள் ரிலீஸில் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  நேற்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் இயக்குனர்  நெல்சன் பீஸ்ட் படத்திற்குப் பிறகு ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளார். இதற்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த  நிலையில்,  நேற்று வெளியான முதல் நாளில் மட்டும் இப்படம்  உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. எனவே, இனி வ்ரும் நாட்களிலு வாரக் கடைசியிலும் இப்படம்  வசூலில் சாதனை படைக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, கமலின்' விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் தமிழ் சினிமாவின் வசூலில் புதிய சாதனை படைத்துள்ள மாதிரி இப்படமும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.