திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (17:50 IST)

ஜெயிலர் பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்

jailer
'ஜெயிலர்' படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர், 'ஜெயிலர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார்,  ஜாக்கிஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.  இந்த நிலையில்,  ரஜினியின் ஜெயிலர் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டி ரசிகர்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும்  ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ‘’புக் மை ஷோ''வில் 2 லட்சத்திற்கு மேல்  லட்சம் டிக்கெட்டுகள்  விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற வெண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றத்தில் வேண்டிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு, இனி மதுக்குடிக்க மாட்டோம் என்று கூறினர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

4 ஆண்டிற்குப் பிறகு இன்று ரஜினிகாந்த் இமயமலை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.