1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (11:17 IST)

துரைமுருகன் என்ன சொன்னாலும் நட்புத் தொடரும்… ரஜினிகாந்த் பதில்!

சமீபத்தில் நடந்த அமைச்சர் எ வ வேலு எழுதிய கலைஞர் பற்றிய வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் இப்போது முதல்வர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார். இந்த பேச்சைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் சிரித்து ரசித்தார்.

அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ”சினிமாவில் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூகவலைதளங்களில் சர்ச்சைகள் கிளம்பி விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் துரைமுருகனின் இந்த தாக்குதல் பதிலுக்கு ரஜினிகாந்த் சமாதானப் போகைக் கடைபிடித்துள்ளார். அதில் “துரைமுருகன் எனது நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் அவருடனான நட்புத் தொடரும்” எனப் பேட்டியளித்துள்ளார்.